Friday, September 2, 2016

மழைக்காலம்

மழைக்காலம்
காகித கப்பல் அன்று
அது விளையாட்டு !

மழைக்காலம்
தெருக்கொரு படகு இன்று
இது வினையாயிற்று !

மழைக்காலம்
குடும்ப அட்டைக்கொரு தோணி நாளை
இதுவும் அரசியலாயிற்று!

Wednesday, August 31, 2016

நினைவுகள்

நிலஒளியில் கழித்த
முன்னிரவின் மிச்சங்கள்
முத்தங்களாய் உன்னிலும் என்னிலும் !

சிற்சில சலனங்களும்
சிற்சில மௌனங்களும்
ரகசியமாய் உன்னிலும் என்னிலும் !

கலவியல் கடந்தும்
உளவியல் ரீதியாய்
முதிர்ச்சி உன்னிலும் என்னிலும் !

மரணம் தழுவும்
நிதர்சன நிமிடம்
நமக்கான நினைவுகள் உன்னிலும் என்னிலும் !

Thursday, March 3, 2011

வீம்பு...

கண் விழிக்கும் காலை அனிச்சையாய்


உனை அணைக்கும் கைகள்!!



தேனீர் கேட்டு இரைந்த பின்

உதடு கடிக்கும் பற்கள்!!



சுகமாய் வெந்நீர் குளியளின்றி

வெட வெடக்கும் உடம்பு!!



காலை உணவு எண்ணி இப்போதே

கலக்கமுறும் வயிறு!!



கையசைத்து வழியனுப்ப ஆளின்றி

கிளம்ப மறுக்கும் வாகனம்!!



போதும் போதும் என்மேல் கோபமும்

உன் தாய் வீட்டு பாசமும்...

வீம்பு மறந்து மனைவி தேடி

தானாகவே நடக்கின்றன கால்கள்!!!...

Sunday, February 21, 2010

தரம்

கவிதைகளை வாசித்துக்காட்டும் போதெல்லாம்,
அவள் புருவங்களையும், உதடுகளையும்,
கவனிப்பேன்...
அதில் தெரிந்து விடும்
என் கவிதையின் தரம்.

என் பேனா

வார்த்தைதேடி வாக்கியம் அமைத்து,
கனவு பிழிந்து கவிதை புனைய,
தேடும்போதெல்லாம் கிடைப்பதே இல்லை...
நீ இரவல் கேட்டதும் எங்கிருந்தோ,
முளைத்துவிடுகிறது என் பேனா...

கூந்தல்

அலைபாயும் கூந்தலை,
அள்ளி நீ முடிக்கும் போதெல்லாம் ,
ஆனந்தப்படுகிறேன்!
என்னைவிட அழகாய் வருடியதால்,
காற்றை நீ கடிந்து கொண்டதாய்!.

அயல்நாடு

அயல்நாடு!
சிறாரும் முதியோரும்,
சீராட்டும் தாய்மாரும்,
தம் கனவே என ஏங்கும் அயல்நாடு!

எனதருமை ஊராரும்,
என்னுயிரின் உற்றாரும்,
வளம்பெருக்க விரைந்ததோர் அயல்நாடு!

தம் குடும்பம் தளைத்தோங்க,
தமக்கைகள் மணமுடிக்க,
விதிஎனவே தலைப்பட்டதோர் அயல்நாடு!

ஓடி உழைத்துக் களைக்கையில்,
தொலைபேசியில் மணத் தூதுவர,
ஆசை அடக்கி அடைபட்டதோர் அயல்நாடு!

மணமுடித்த மறுமாதம் பயணம்,
மந்திரித்த கோழியாய் மனம் பதற,
கண்கசக்கி கரை சேர்ந்ததோர் அயல்நாடு!

காதலை செல்பேசிக்கும், கண்ணீரை கடிதங்களுக்கும்,
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்போரை,
ஏளனமாய் பார்க்கிறதோ?
விழுங்கிவிட்ட அயல்நாடும், விலகிவந்த தாய்நாடும்!..