கனவுகளோடும் கவிதைகளோடும்
மூழ்கி எழுந்த வருடங்கள்!.
யார் முதலில் துயில் எழ?
போர்வைக்குள் உடல் குறுக்கிய வருடங்கள்!.
டீக்கடை தோறும் கதைபேசிய படி
மணித்துளிகளை விழுங்கிய வருடங்கள்!.
கல்லூரி கசந்த போதெல்லாம் ஒன்றாய்
ஊர் சுற்றி 'களித்த' வருடங்கள்!.
விடுதி மொட்டை மாடியில்
நட்சத்திரம் எண்ணிய வருடங்கள்!.
அரியர் இல்லாதவன் அரை மனிதன்
தத்துவம் பயின்ற வருடங்கள்!.
நட்பின் பிரிவை எண்ணி
இமைக்கும் தெரியாமல் அழுத வருடங்கள்!.
இன்று!
அவ்வப்போது வரும் மின்னஞ்சல்கள் கேட்கிறது
நண்பா என்று திரும்பும் அந்த கல்லூரி வருடங்கள்!...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment