ஊளையிடும் நாய்,நரியின் ஓசைக்கும்,
சலசலக்கும் மரங்களின் பாடலுக்கும்,
கவனமாய் தலையசைத்தபடி,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிழலுருவங்கள்.
என்றோ கூடிகழித்த போகியின் நினைவாய் புகை மூட்டம்,
குளிருக்கும் மனதிற்கும் இதம் தான் போலும்!.
இயந்திர துப்பாக்கியை அவ்வப்போது துடைத்தபடி புகை வழியும் வாயோடு,
இன்றோ நாளையோ! இறையோ பலியோ! தயாராய்...
படித்து படித்து கிழிந்தே போன காதலியின் கடிதம் கையிலிருக்க,
வழியும் கண்ணீரிலும் சலனமற்ற கவனமாய்!.
இவர்களின் உலகம் தனிதான்...
தோட்டா உரசிச்சென்ற காயமுண்டு!
பலர் உருப்பிழந்த சோகமுண்டு!
உடல் சிதறிப் போனதுண்டு!
பலர் உயிரற்றே மாண்டதுண்டு!
நாடுகள் ஆடும் சதுரங்கம்,
இவர்களல்லவோ பகடைகள்!
கூடுகள் விட்டு பிரிந்து வந்த,
சிறகில்லா பறவைகள்!
யார் அறிவார் இவர் மனதின் ஆழங்கள்?
யார் அறிவார் இவர் மனதின் சோகங்கள்?
இப்படியே நீளும் இந்த இரவும் சொல்லும்...
இனி
எல்லையில்லா தேசம் ஒன்றே மனிதம் நல்கும்!.
Subscribe to:
Post Comments (Atom)


un sinthanaiyin elhai itho un kavithaiyil kandarihiraen Ananthe kanneerudan
ReplyDeleteitho kangalinindru kaanamal pone num ayal thaesathu nanbargalin alu kuralai unnil ethirpaartavanai idhris
nanri nanbane
ReplyDelete