Sunday, February 21, 2010

அயல்நாடு

அயல்நாடு!
சிறாரும் முதியோரும்,
சீராட்டும் தாய்மாரும்,
தம் கனவே என ஏங்கும் அயல்நாடு!

எனதருமை ஊராரும்,
என்னுயிரின் உற்றாரும்,
வளம்பெருக்க விரைந்ததோர் அயல்நாடு!

தம் குடும்பம் தளைத்தோங்க,
தமக்கைகள் மணமுடிக்க,
விதிஎனவே தலைப்பட்டதோர் அயல்நாடு!

ஓடி உழைத்துக் களைக்கையில்,
தொலைபேசியில் மணத் தூதுவர,
ஆசை அடக்கி அடைபட்டதோர் அயல்நாடு!

மணமுடித்த மறுமாதம் பயணம்,
மந்திரித்த கோழியாய் மனம் பதற,
கண்கசக்கி கரை சேர்ந்ததோர் அயல்நாடு!

காதலை செல்பேசிக்கும், கண்ணீரை கடிதங்களுக்கும்,
காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்போரை,
ஏளனமாய் பார்க்கிறதோ?
விழுங்கிவிட்ட அயல்நாடும், விலகிவந்த தாய்நாடும்!..

1 comment:

  1. Amm palar
    Maanathirkaage vaanam thaandiyevargal Ingaey,
    Siragilandhe kiliyai pole siraipattu kidappathai alagai sonnaay,
    Silarathu kanavu palarathu vaalkaiku pulli vaikirathai alagai sonnaay,
    Kanavugalodum Kadhalodum kaanamalpone kangalai kaatrinil thaedum avalam alagai sonnaay,
    Aaruthal vaarthaigalukage alai payum idhayam thannai alagai sonnaay,
    Malarnthe Mugamum,Malalai mozhiyum vittu
    paalai manalil padum paatai alagaay sonnaay,
    Sogam mattumaey micham irukke
    ithai yogam endru ennum avargalai alagaay sonnaay,
    veesum kaatrilengum Aval vaasam thaedum
    vaedhanaiyai alagaay sonnaay,
    manam pirundhu,makkalai prindhu,
    panam vaendi payanam seythe ivanathu payanam Endru mudiyumo...?
    Vaalkaiyai vitru vaalvai thaedum Ivargalin Viyabaaram Endru mudiyomo?
    Kaelvigaluku pathi vaendi Iraivanai Piraarthithvanaage....Kaathirukirom......

    ReplyDelete