Thursday, February 4, 2010

எங்கே மனிதம்?...

நெஞ்சு கிழித்து குருதி குடிக்கும்
குரூரம் இங்கே கண்டேன்!
நஞ்சு பொதிந்து வாக்கு தவறும்
வஞ்சம் இங்கே கண்டேன்!

ஆசை அழித்து அறிவு மழுங்கி
அகம்பாவம் இங்கே கண்டேன்!
கனவு தகர்த்து உறவு மறந்த
கர்வம் இங்கே கண்டேன்!

மனம் நசுக்கி பணம் புசிக்கும்
பாவம் இங்கே கண்டேன்!
மனிதன் கொன்று மனிதன் தின்னும்
மடமை இங்கே கண்டேன்!

எங்கே மனிதம்? எங்கே மனிதன்?
கொட்டும் கண்ணீர் குரல்வளை அடைக்க,
குருதி சுண்டி சாகும்வரை மறவேன் இதை...
எங்கே மனிதம்? எங்கே மனிதன்?...

2 comments:

  1. வாழ்க்கை இன்னதென்று அறியாதோர் செய்யும் அறியாமை கலந்த செயல்களிவை..



    மறப்போம்..,... அந்த இரண்டாவது 'போம்' வேண்டாமென்று நினைக்கிறேன்,.

    சமுதாயக்கோபம் நம்மை திசைத்திருப்பி வேடிக்கைபார்க்கும். பொறுமை காப்போம்..



    அன்பே சிவம்...

    ReplyDelete
  2. Thaedum manitham kidaithu vittal
    Thaedum Manithan Kidaithu viduvaan.
    Panam vaendum Enbatharkaage
    Pinam thinnum manthirgalidam
    Manitham thaedum Nanba Un kanavu Palikattum
    Ingaey saagupadiyagum engal uyir
    Nalaye thalaimuraikavathu Unavagattum
    Kanavugalodum...Kanneerodum.....Kaathirukiraen un adthe payanathirkaage....

    ReplyDelete